வாலிபரிடம் செல்போன் பறிப்பு; 2 பேர் கைது
தூத்துக்குடியில் வாலிபரிடம் செல்போன் பறித்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி கணேஷ்நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகேசன் (வயது 23). இவர் தனது நண்பரான வள்ளிநாயகபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் மகன் அபிஷ்குமார் (20) என்பவருடன் கடந்த 31-ந் தேதி செல்சீனி காலனி பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மாரிசிவா என்ற மொட்ட சிவா (21), சாந்திநகரைச் சேர்ந்த பரமசிவன் மகன் அரிமுருகன் (25) ஆகிய 2 பேர் சேர்ந்து முருகேசன், அபிஷ்குமாரை தாக்கிவிட்டு, அபிஷ்குமாரின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து முருகேசன் தென்பாகம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து மாரிசிவா, அரிமுருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர்.