அறக்கட்டளை ஊழியரிடம் செல்போன்-பணம் பறிப்பு

நாகையில் அறக்கட்டளை ஊழியரிடம் செல்போன்-பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர்.

Update: 2022-07-23 15:18 GMT

வெளிப்பாளையம்:

நாகை காடம்பாடி மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது40).இவர் நாகை அருகே பாலையூரில் உள்ள ஒரு அறக்கட்டளையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் பொன்னுசாமியை வழிமறித்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பொன்னுசாமி கொடுத்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்