பிரதமரின் கவுரவ நிதி திட்ட தவணையை தொடர்ந்து பெற ஆதார் எண்ணுடன் செல்போன்-வங்கி கணக்கை இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்- வேளாண் உதவி இயக்குனர்

விவசாயிகள் தவணை தொகையை தொடர்ந்து பெற ஆதார் எண்ணுடன் செல்போன்-வங்கி கணக்கை இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என திருமருகல் வேளாண் உதவி இயக்குனர் புஷ்கலா அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2023-09-05 19:30 GMT

விவசாயிகள் தவணை தொகையை தொடர்ந்து பெற ஆதார் எண்ணுடன் செல்போன்-வங்கி கணக்கை இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என திருமருகல் வேளாண் உதவி இயக்குனர் புஷ்கலா அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கவுரவ நிதி திட்டம்

பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம், 3 தவணையாக வழங்கப்படுகிறது. இதில் அடுத்தடுத்த தவணை தொகையை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணை இணைத்து கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இ-பதிவு மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து கொண்டவர்களுக்கே 14-வது தவணை தொகை விடுவிக்கப்படும்.

அங்ககச்சான்று

முழுமையான விவரங்களை பதிவேற்றம் செய்யாதவர்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும். வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் விவசாயிகளை அங்கக வேளாண்மையில் ஈடுபடுத்தி அங்ககச்சான்று பெற்று அங்கக பொருட்களாக விற்பனை செய்ய இத்திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்படும்.

அங்கக வேளாண்மை செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

எக்டேருக்கு ரூ.3 ஆயிரம் மானியம்

நாகை மாவட்டத்திற்கு 400 எக்டேர் பரப்பளவில் 20 தொகுப்புகளாக அமைத்து இத்திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு தொகுப்பில் குறைந்தது 20 விவசாயிகள் இடம் பெற வேண்டும். இதில் ஒரு விவசாயி அதிகபட்சமாக 2 எக்டேர் வரை பயன்பெறலாம். அங்கக இடுபொருட்கள் தயாரிக்க அல்லது வெளியிலிருந்து வாங்குவதற்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு எக்டேருக்கு ரூ.3 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

இ்வ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்