கோத்தகிரி
கோத்தகிரி அருகே கரிக்கையூர் கிராமத்தில் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் உலக பழங்குடியினர் தின விழா நடைபெற்றது. இதற்கு கள இயக்குனர் சிங்கராஜ் தலைமை தாங்கினார். விழாவில், பழங்குடியின தினத்தை பற்றிய சிறப்புகள் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தை பாதுகாத்தல், அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதல் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் பாரம்பரிய ஊட்டச்சத்து உணவுமுறை, அதன் முக்கியத்துவம் மற்றும் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ-மாணவிகள் பங்கேற்ற கலாச்சார கலைநிகழ்சிகள் நடைபெற்றது. பின்னர் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாரம்பரிய உணவான தினை பாயசம் வழங்கப்பட்டது. பின்னர் கிராம மக்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் பிரியா, கிராம உதவியர் சகாதேவன் மற்றும் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.