உலக விலங்கின நோய்கள் தின விழா

ஓட்டப்பிடாரம் அருகே உலக விலங்கின நோய்கள் தின விழா நடந்தது.

Update: 2022-07-08 09:59 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் அரசு கால்நடை மருத்துவமனையில் உலக விலங்கின நோய்கள் தின விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு புதியம்புத்தூர் கால்நடை மருத்துவர் கவுரி சங்கர் தலைமை தாங்கினார். அப்போது அவர், விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவும் எலி காய்ச்சல், பன்றி காய்ச்சல், வெறிநாய்க்கடி, பிளேக் உள்ளிட்ட பல்வேறு நோய்களை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஐஸ்வர்யா, சுகாதார ஆய்வாளர் தேவசந்தரம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்