காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-15 09:54 GMT

சமத்துவ பொங்கல்

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பில் சுகாதார பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் விழா படப்பை ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன் தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வினோத் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். படப்பை ஊராட்சி மன்ற அலுவலக வளாகப் பகுதியில் நடைபெற்ற இதை காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர் மணீஷ் நாரணவரே சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உடன் இருந்தார். இதில் படப்பை ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மணிமங்கலம்

அதேபோல் மணிமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அய்யப்பன் தலைமையில் சமத்துவ பொங்கல் மற்றும் சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சென்னகுப்பம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் தலைமையில் சமத்துவ பொங்கல் மற்றும் சுகாதார பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. காவனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி வெங்கடேசன் தலைமையில் சமத்துவ பொங்கல் மற்றும் சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோவிந்தன் முன்னிலை வைத்தார்.

எறையூர்

எறையூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சசிரேகா சரவணன் தலைமையில் சமத்துவ பொங்கல் மற்றும் சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது. வளையக்கரணை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமையில் சமத்துவ பொங்கல் மற்றும் சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது. வடக்குப்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி மேத்தா வசந்த்குமார் தலைமையில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்