அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
51-வது ஆண்டு தொடக்க விழாவினை அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.;
சிவகாசி,
51-வது ஆண்டு தொடக்க விழாவினை அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.
தொடக்க விழா
அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்று 51-வது ஆண்டு தொடக்கவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சிவகாசி சட்டமன்ற தொகுதியில் திருத்தங்கல் காளிமுத்துநகர், தேவர்சிலை, சிவகாசி பராசக்தி காலனி, பழைய விருதுநகர் ரோடு, விஸ்வநத்தம், ஆனைக்குட்டம், எஸ்.என்.புரம் ஆகிய இடங்களில் அ.தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சி கொடியை ஏற்றி வைத்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவபடங்களுக்கு மலர்தூவி மாரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், மாநகர பகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், சாம், ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநத்தம் ஆரோக்கியம், கருப்பசாமி, வெங்கடேஷ், முன்னாள் யூனியன் தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், விஸ்வநத்தம் மணிகண்டன், ரமணா, மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், அசன்பதுருதீன், மகளிர் அணி திருத்தங்கல் ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
அதேபோல விருதுநகரில் நடைபெற்ற விழாவில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் கலாநிதி, நகர செயலாளர் முகமது நைனார், ஒன்றிய செயலாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்ச ராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் சரவணகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.