காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பாவூர்சத்திரத்தில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.;
பாவூர்சத்திரம்:
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ராகுல்காந்திக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதால், எம்.பி.யாக மீண்டும் ராகுல்காந்தி பொறுப்பேற்று, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டார். இதை கொண்டாடும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
கீழப்பாவூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் அடைக்கலப்பட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் தலைமை தாங்கினார். வட்டார பொறுப்பாளர் மகாராஜா, செல்லப்பா, மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் தங்கரத்தினம் இனிப்புகள் வழங்கினார். மாவட்ட துணைத்தலைவர் செல்வன், ஆலங்குளம் வட்டார தலைவர் ரூபன்ராஜ், ஐ.என்.டி.யூ.சி. வைகுண்டராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.