அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திருவேங்கடத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Update: 2023-04-21 18:45 GMT

திருவேங்கடம்:

இந்திய தேர்தல் ஆணையத்தால் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரிக்கப்பட்டதையொட்டி திருவேங்கடம் மெயின் பஜாரில் காந்தி மண்டபம் முன்பாக குருவிகுளம் அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் காளிதாஸ், ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவாசன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் காளிதாஸ், ஒன்றிய பொருளாளர் தினகரன், கிளைச் செயலாளர் சுபாஷ், ஜெயராஜ், பச்சை ராஜ், எல்லப்பன், மாரிசாமி, கருப்பசாமி, செந்தில்குமார், காமராஜ், ரவி மற்றும் திருவேங்கடம் பேரூர் நிர்வாகிகள் அ.தி.மு.க. துணை செயலாளரும், கவுன்சிலருமான பாலமுருகன், நகர பொருளாளர் மாரிக்கனி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ரவிச்சந்திரன், வார்டு செயலாளர்கள் யோவான், சுதாகர், சுப்புராஜ், ராஜா, ராமர், குமார், கணேசன், பிச்சையா பிள்ளை, மாடசாமி, மகளிர் அணி நிர்மலா தேவி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்