அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
செங்கோட்டையில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
செங்கோட்டை:
செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வைத்து நகர அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பையும், எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதை வரவேற்றும் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா அறிவுறுத்தலின் பேரில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச்செயலாளா் பொய்கை சோ.மாரியப்ன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளா் கணேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.