கர்நாடகா தேர்தலில் வெற்றி: குமரியில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து குமரியில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நாகர்கோவில்,
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் ெவற்றி ெபற்றதையடுத்து குமரியில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து குமரியில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
கருங்கலில் ராஜீவ்காந்தி சிலைக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், கருங்கல் பேரூர் காங்கிரஸ் தலைவர் குமரேசன், கருங்கல் பேரூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஆஸ்கர் பிரடி, கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன், பாலூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சதீஷ்குமார், மத்திகோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் மரிய அருள் தாஸ், மனித உரிமை பிரிவு வட்டார தலைவர் ராஜகிளன், கீழ்குளம் பேரூராட்சி துணை தலைவர் விஜயகுமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குலசேகரம்
குலசேகரம் சந்தை சந்திப்பில் திருவட்டார் மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாப்பட்டது. நிகழ்ச்சிக்கு மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வினுட்டிராய் தலைமை தாங்கினார். மாவட்ட சேவாதள காங்கிரஸ் தலைவர் வக்கீல் காஸ்டன் கிளீட்டஸ், மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்தாஸ், பேரூராட்சி தலைவர்கள் அகஸ்டின், பொன் ரவி, கட்சி நிர்வாகிகள் கமர்தீன், மோன்சி சாமுவேல், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குளச்சல்
குளச்சல் நகர காங்கிரஸ் சார்பில் தலைவர் சந்திரசேகர் தலைமையில் அண்ணாசிலை சந்திப்பு மற்றும் பெரிய பள்ளி முக்கு சந்திப்பில் காங்கிரசார் பட்டாசு வெடித்து மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கியும் கொண்டாடினர். மீனவர் காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்டார்வின் தலைமையில் குளச்சல் பீச் சந்திப்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது.
இந்தநிகழ்ச்சிகளில் மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணைத்தலைவர் முனாப், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், குளச்சல் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேக்கப், மாவட்ட மீனவர் காங்கிரஸ் துணைத்தலைவர் லாலின், திங்கள்சந்தை பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் விஜூமோன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.