அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
பென்னாகரத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பென்னாகரம்:
அ.தி.மு.க. தலைமை அலுவலகம் பூட்டப்பட்டதை தொடர்ந்து இது தொடர்பான வழக்கை கோர்ட்டு விசாரித்து தீர்ப்பு கூறியது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசம் கட்சி அலுவலகம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து பென்னாகரத்தில் நகர செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பு, கூட்டுறவு சங்க தலைவர் ரவி, செங்கனூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அண்ணா நரசிம்மன், கவுன்சிலர் பீமன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆறுமுகம், நகர நிர்வாகி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.