ம.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கோவில்பட்டியில் ம.தி.மு.க. ஆண்டு விழாவையொட்டி அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கோவில்பட்டி:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 30-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் மத்திய ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் எட்டயபுரம் ரோடு தொழிற்பேட்டை அருகில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ் கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வனராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துபாண்டி, மாநில விவசாய அணி துணை செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி செண்பகராஜ், கிளைச்செயலாளர் நாகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.