காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-07-16 18:17 GMT

பெரம்பலூர்-துறையூர் சாலையில் புனித பனிமய மாதா திருத்தலம் அருகே அரசு உதவி பெறும் பள்ளியான ஆர்.சி. பாத்திமா தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா பள்ளியின் தாளாளரும், பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குருவான ராஜமாணிக்கம் வழிக்காட்டுதலின் படி நேற்று முன்தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி அனிதா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை புஷ்பா மேரி முன்னிலை வகித்தார். பிறந்த நாள் விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் விழா மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரின் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து விழா மேடையில் காமராஜர் பற்றி மாணவ-மாணவிகள் பேசினர். கவிதை வாசித்தனர். பாட்டும் பாடினர். மேலும் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை வில்லுப்பாட்டு மூலம் மாணவ-மாணவிகள் பாடி அசத்தினர். காமராஜர் பற்றிய பாடல்களுக்கு மாணவ-மாணவிகள் நடனமாடினர். மேலும் மாணவர்களில் சிலர் காமராஜர் வேடமணிந்தும், சுதந்திர போராட்ட தியாகிகளின் வேடமணிந்தும் பள்ளிக்கு வருகை புரிந்து காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை அருட்சகோதரி ஆனந்தி, ஆசிரியைகள் ரோஸ்லின், மேரி மெல்வின் லியோட்ரா மற்றும் அனைத்து ஆசிரியைகளும் செய்திருந்தனர். காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி ஏற்கனவே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்