பாழடைந்த வேளாண் அலுவலர் குடியிருப்புகள் இடித்து அகற்றம்-வாக்குவாதம்

பாழடைந்த வேளாண் அலுவலர் குடியிருப்புகளை பொதுமக்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றியபோது அதிகாரிகள் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2023-08-16 18:00 GMT

ஆரணி

பாழடைந்த வேளாண் அலுவலர் குடியிருப்புகளை பொதுமக்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றியபோது அதிகாரிகள் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆரணி கொசப்பாளையம் களத்து மேட்டு தெருவில் வேளாண் அலுவலர் குடியிருப்பில் பாம்புகள் இருப்பிடமாகவும், சமூக விரோதிகளின் கூடமாகவும் இருந்து வருகிறது. அக்கட்டிடத்தின் அருகாமையில் அங்கன்வாடி மையம் இருப்பதால் பாம்புகள் உள்ளே நுழைவதால் பள்ளி குழந்தைகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றன.

இது சம்பந்தமாக பகுதி பொதுமக்கள் நகர மன்ற உறுப்பினர் சாமுத்திரிகா சதீஷிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் பொக்கைலைன் எந்திரம் மூலம் பாழடைந்த வேளாண் அலுவலர் குடியிருப்பி இடித்து அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் வேளாண் அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் நித்யா, கிராம நிர்வாக அலுவலர்கள் கண்ணதாசன், சங்கர் சென்று அது குறித்து கேட்டனர். நகராட்சி பொறியாளரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது பொதுமக்கள் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்து எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்