தொண்டி,
திருவாடானை தாலுகாவில் அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குறு வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் ஒரு பகுதியாக 14 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கால்பந்து, பூப்பந்து மற்றும் ஹேண்ட் பால் போட்டிகள் தொண்டி செய்யது முகமது அரசினர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றன.
போட்டிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனி குமார் தொடங்கி வைத்தார். இதில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.