குறுவட்ட அளவிலான தடகள போட்டி

திருவாரூரில் நடந்த குறுவட்ட அளவிலான தடகள போட்டியில் 600 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-08-26 18:45 GMT

திருவாரூரில் நடந்த குறுவட்ட அளவிலான தடகள போட்டியில் 600 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தடகள போட்டி

திருவாரூரில் குறுவட்ட அளவிலான தடகள போட்டி திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

மேலும் ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றி வைத்து போட்டிகளையும் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன், திருவாரூர் குறுவட்ட இணைச் செயலாளர் மைதிலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

600 மாணவர்கள் பங்கேற்பு

இந்த போட்டியில் 14,17,19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 800 மீட்டர், 1,500 மற்றும் 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டெறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் மாவட்ட முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார், மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 600 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்