காவிரி தண்ணீரை மலர் தூவி தொட்டு வணங்கி வரவேற்ற விவசாயிகள்

நெடுவாசல் கடைமடை பகுதிக்கு வந்த காவிரி தண்ணீரை மலர் தூவி தொட்டு வணங்கி விவசாயிகள் வரவேற்றனர்.

Update: 2022-06-10 18:35 GMT

வடகாடு:

காவிரி தண்ணீருக்கு வரவேற்பு

மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் இறுதியில் டெல்டா பாசன விவசாயத்திற்கு காவிரி தண்ணீரை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி திறந்து வைத்தார். இந்த காவிரி தண்ணீரானது கல்லணை கால்வாய்கள் வழியாக, நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கடைமடை பகுதிக்கு வந்தடைந்தது.

இதை முன்னிட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காவிரி தாயை மலர் தூவியும், தொட்டு வணங்கியும், பாரம்பரிய நெல் மணிகளை தூவியும் வரவேற்று மகிழ்ந்தனர்.

கோரிக்கை

மேலும் இந்த காவிரி தண்ணீர் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதாகவும் கூறப்படுகிறது.

இறுதியில் காவிரி நீர் 148 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்து முப்பாலை பகுதிக்கு சென்று அங்கிருந்து கடலில் கலக்கிறது. சற்று முன்னதாகவே திறக்கப்பட்டுள்ள இந்த காவிரி தண்ணீரை இடை நிற்றல் இல்லாமல் தொடர்ந்து வர வழிவகை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்