காவிரி நீர் விவகாரம்: மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு முறையிட்டால், தமிழக பாஜக துணை நிற்கும் - அண்ணாமலை

காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு முறையிட்டால், தமிழக பாஜக துணை நிற்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-05 08:05 GMT

விழுப்புரம்,

விழுப்புரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தண்ணீர் தர முடியாது என கூற கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களை அடமானம் வைப்பதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. மேகதாது அணை கூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது.

3 மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது. காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு வலியுறுத்தினால், தமிழக பாஜக துணை நிற்கும்.

பொது சிவில் சட்டம் அனைவரையும் இணைப்பதற்காக வரக்கூடிய சட்டம். ஒரு நாட்டில் இரு வேறு சட்டங்கள் இருந்தால் ஒற்றுமை இருக்காது என அம்பேத்கர் கூறியிருந்தார். பொது சிவில் சட்டம் குறித்து அதிமுகவுக்கு புரிதல் இல்லை; அதனை புரிந்து கொண்டு மாறுவார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்