காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் அதிமுக திட்டமல்ல : அமைச்சர் துரைமுருகன்

முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய கதவணை விரைவில் திறக்கப்படும்.;

Update: 2022-10-15 15:56 GMT

முக்கொம்பு,

திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கதவணையை தமிழக நீர்வளதுறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய கதவணை விரைவில் திறக்கப்படும். காவிரி, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே மூத்த பொறியாளர்களுடன் கலந்து ஆலோசித்துள்ளோம்.

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது அதிமுக அரசு உடைய திட்டமல்ல. அது மத்திய அரசின் திட்டம். தமிழகத்தில் அனைத்து ஏரி, குளங்களும் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்