பன்றிகளை பிடித்து சென்ற வாகனத்தை மறித்து போராட்டம்

உடன்குடி பேரூராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக நடமாடிய பன்றிகளை ஏற்றிச்சென்ற வாகனத்தை மறித்து ஒருதரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பன்றிகளை விடுவித்த அதிகாரி, இனிமேல் பஜாரில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Update: 2023-02-08 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி பேரூராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக நடமாடிய பன்றிகளை ஏற்றிச்சென்ற வாகனத்தை மறித்து ஒருதரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பன்றிகளை விடுவித்த அதிகாரி, இனிமேல் பஜாரில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

பன்றிகளால் தொல்லை

உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக ஏராளமான பன்றிகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகின்றன. இதனால் கடும் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்கள், வியாபாரிகள் தரப்பில் பேரூராட்சி அலுவலகத்திற்கு புகார்கள் தெரிவித்து வந்தனர்.

இதை தொடர்ந்து செயல் அலுவலர் பாபு உத்தரவின் பேரில் நேற்று உடன்குடி நகரப்பகுதியில் பொது மக்களுக்கு இடையூறு சுற்றித்திரிந்த பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வாகனத்தை மறித்து போராட்டம்

அதன்படி பேரூராட்சி ஊழியர்கள் 10 பன்றிகளை பிடித்து ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அலுவலகத்துக்கு கொண்டு ெசன்று கொண்டிருந்தனர். இதை அறிந்த பன்றிகளின் உரிமையாளர்களும், ஒரு சமுதாய மக்களும் உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை அருகே பன்றிகள் ஏற்றிச்ெசன்ற வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த செயல் அலுவலர் மற்றும் குலசேகரபட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இனிமேல், பொதுமக்களுக்கு இடையூறாக பன்றிகளை ரோட்டில் பன்றிகளை நடமாட விடமாட்டோம். கூண்டில்அடைத்து வைத்து அவற்றை வளர்ப்பதாக பன்றி உரிமையாளர்கள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து பேரூராட்சி வாகனத்தில் இருந்த பன்றிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போராட்டத்தையும் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

அதிகாரி எச்சரிக்கை

இனிவரும் காலங்களில் உடன்குடி பஜார் வீதிகளிலோ, பொதுமக்களுக்கு இடையூறாகவோ பன்றிகள் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்