கால்நடை மலடு நீக்க சிகிச்சை முகாம்

Update: 2023-02-03 19:30 GMT

பாலக்கோடு:-

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கணபதி ஊராட்சி பெல்லுஅள்ளி கிராமத்தில் நீர்வள நிலவள திட்டம் 3-ன் கீழ் சின்னாறு உபவடி பகுதியான பெல்லு அள்ளி கிராமத்தில் கால்நடைகளுக்கான மலடு நீக்க சிகிச்சை முகாம் நடந்தது. கால்நடை மண்டல இணை இயக்குனர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.

முகாமில் பெல்லு அள்ளி, சாமன்கொட்டாய், கரிக்குட்டனூர், சீங்காடு உள்ளிட்ட 20 கிராமங்களை சேர்ந்த கால்நடைகளுக்கு மலடுநீக்க சிகிச்சை, குடற்புழு நீக்கம், சினை ஊசி போடுதல், மடிவீக்க நோய்களுக்கான மருந்து, கன்று குட்டிகளுக்கு குடற்புழு நீக்கம் செய்து தாது உப்பு கட்டி வழங்கப்பட்டது. சினை பிடிக்காத மாடுகளுக்கு சி.ஐ.டி.ஆர். கருவி பொருத்தப்பட்டது. மடிவீக்க நோய் வராமல் தடுக்க முன்கூட்டியே தடுக்கும் வகையில் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. மடிவீக்க ஏற்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் உதவி இயக்குனர்கள் மணிமாறன், சண்முகசுந்தரம், கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர்கள் தீயாகசீலன், முத்து, கால்நடை ஆய்வாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொன்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்