செங்கல்பட்டில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் பணம் திருட்டு
செங்கல்பட்டில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் திருடப்பட்டது.;
ரேஷன் கடை விற்பனையாளர்
செங்கல்பட்டு களத்துமேடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). இவர் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட விரால்பாக்கம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல வேலை முடித்து விட்டு வீடு திரும்பியவர் செங்கல்பட்டு வேதாசல நகரில் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்க்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கையில் வைத்திருந்த பையையும் மோட்டார் சைக்கிளின் மீது வைத்துவிட்டு டீ குடிக்கச் சென்றார். பையில் ரூ.45 ஆயிரம் இருந்தது.
திருட்டு
வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் மீது வைத்திருந்த பணப்பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் அளித்தார்.
மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த ரூ.45 ஆயிரம் தொடர்பாக செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.