ஆதரவற்ற பெண்ணிற்கு பிரசவம் பார்த்த காவலர்களுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ்

ஆதரவற்ற பெண்ணிற்கு பிரசவம் பார்த்த காவலர்களுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.

Update: 2022-09-19 17:11 GMT

வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் இளவரசி. இவர் சம்பவத்தன்று இரவு பணியில் இருந்தபோது தெற்கு போலீஸ் நிலையம் அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆந்திராவை சேர்ந்த ஆதரவற்ற பெண் பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்தார். இதையடுத்து இளவரசி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆம்புலன்ஸ் வரும் முன்பு பெண்ணிற்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து இளவரசி, முதல்நிலை காவலர் சாந்தி உதவியுடன் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் உதவி செய்தார். அதையடுத்து தாய் மற்றும் குழந்தை சிகிச்சைக்காக வேலூர் பென்லேன்ட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஆதரவற்ற பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மற்றும் அதற்கு உதவி புரிந்த 3 போலீசாரை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் அழைத்து அவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி மனிதாபிமான செயலை பாராட்டினார். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், 3 போலீசாருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்