மத்திகிரி அருகே டிரைவரை கத்திமுனையில் மிரட்டி கார், பணம் பறிப்பு

மத்திகிரி அருகே டிரைவரை கத்தி முனையில் மிரட்டி கார், பணம் பறித்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-06-19 16:21 GMT

மத்திகிரி:

மத்திகிரி அருகே டிரைவரை கத்தி முனையில் மிரட்டி கார், பணம் பறித்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கார் டிரைவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா பைரமங்கலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36). கார் டிரைவர். சம்பவத்தன்று இரவு இவர் காரில் மத்திகிரி-கெலமங்கலம் சாலையில் ஜொனபண்டா ஆஞ்சநேயர் கோவில் அருகில் வந்து கொண்டு இருந்தார்.

அந்த பகுதியில் காரை சாலையோரம் நிறுத்தி ராஜ்குமார் விட்டு கீழே நடந்து சென்றார். அப்போது 22 முதல் 25 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென ராஜ்குமாரை தாக்கினர். பின்னர் அவரை கத்தி முனையில் மிரட்டி ரூ.2 ஆயிரம் மற்றும் கார் சாவியை பறித்து கொண்டு அந்த நபர்கள் காரை எடுத்து சென்றனர்.

வலைவீச்சு

இதனால் ராஜ்குமார் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்