மூதாட்டியை தாக்கிய வாலிபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு
மூதாட்டியை தாக்கிய வாலிபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அழிசுகுடி கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்கொடி (வயது 66). இவரது கொழுந்தனார் மகன் திருநாவுக்கரசு என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழ்கொடி வீட்டில் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த திருநாவுக்கரசுவின் மகன் தினேஷ்குமார் (26) தமிழ்கொடியை தகாத வார்த்தைகளால் திட்டி மது பாட்டிலை உடைத்து தமிழ்கொடியை காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் குறித்து தமிழ்கொடி அளித்த புகாரின் பேரில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை வலைவீசி தேடி வருகிறார்.