சென்னை டிபிஐ வளாகத்தில் அன்பழகன் சிலை அமைக்க தடை கோரிய வழக்கு வாபஸ்...!

சென்னை டிபிஐ வளாகத்தில் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்யது உத்தரவிட்டது.;

Update:2023-01-02 11:56 IST

சென்னை,

சென்னை டிபிஐ வளாகத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரி கோவையை சேர்ந்த பழனிசாமி என்பவர் சென்னை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஐகோர்டில் விசாரணைக்கு வரவிருந்த நிலை மனுதாரர் பழனிசாமி இவ்வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.

இதனால் டிபிஐ வளாகத்தில் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்யது உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்