வக்கீலை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு

மயிலாடுதுறையில் வக்கீலை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Update: 2023-05-09 18:45 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெரிய கொக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 34). மயிலாடுதுறையை சேர்ந்தவர் அப்புக்குட்டி என்கிற பிரசன்னா. இவர்கள் இருவரும் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வழக்கு தொடர்பாக புகார் அளிக்க மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது வழக்கு தொடர்பாக பேசிக் கொண்டிருந்த சதீஷ்குமார், பிரசன்னா ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது பிரசன்னா தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.தொடர்ந்து சம்பவம் தொடர்பாக அப்புக்குட்டி என்கிற பிரசன்னா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்