அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சி பொம்மநாயக்கன்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் அறிவியல் ஆசிரியர் மருதை (வயது 59). இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்தது. அதன்பேரில் பள்ளி தலைமையாசிரியை கொடுத்த புகாரின்பேரில் ஆசிரியர் மருதையை குளித்தலை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதையடுத்து ஆசிரியர் மருதையை விடுதலை செய்யக்கோரி ஊர்பொதுமக்கள் மற்றும் மாணவி-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டத்ததாக பொன்னிவளவன், அண்ணாதுரை, பரமசிவம் என்ற கோபி, செல்வம், மாரிமுத்து, முத்துசாமி, முருகேசன், அர்ஜுனன், ராஜா என்ற முருகேசன், கணபதி, சின்னகாளை உள்பட சிலர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.