வெண்ணந்தூர்
வெண்ணந்தூர் அருகே உள்ள பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு அரூர் பகுதியை சேர்ந்த உறவினர்கள் வந்திருந்தனர். இந்தநிலையில் நிகழ்ச்சிக்கு வந்த 5 வாலிபர்கள் அதே பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த மாணவியின் சகோதரர், அவர்களை தட்டிக்கேட்டதாக தெரிகிறது. அப்போது மாணவியின் சகோதரரை 5 பேரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்த மாணவி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பற்றி அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக அவரை காப்பாற்றி ஆட்டையாம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் எங்களது வீட்டிற்குள் புகுந்து தனது மகளை பலவந்தமாக தாக்கி பாலியல் கொடுமை செய்ததாக புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் அருணாச்சலம், சதீஸ் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.