எய்ட்ஸ், புற்றுநோயாளிகளுக்கு வலி நிவாரண சிறப்பு சிகிச்சை மையங்கள் கோரி வழக்கு

புற்றுநோய், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வலி நிவாரண சிறப்பு சிகிச்சை மையங்களை ஏற்படுத்தக்கோரிய வழக்கு குறித்து அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-01-20 21:28 GMT

மதுரை,

நான் வக்கீலாக பணியாற்றி வருகிறேன். தொழில் நிமித்தமாக பலதரப்பட்டவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அமைகிறது. கூலித்தொழிலாளி ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் கட்டிட வேலையில் ஈடுபடும்போது, காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

காயம் ஏற்பட்ட காலில் மிகுந்த வலியால் துடித்து, பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி விசாரித்தபோது, இதேபோல புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு, நோய் முற்றிய நிலையில் அதிகமான வலியால் அந்த நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி இறக்கின்றனர் என்பது தெரியவந்தது.

சிறப்பு சிகிச்சை மையம்

இந்த நோயாளிகளுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் வலி நிவாரண சிறப்பு மையங்கள் மூலம் உரிய சிகிச்சை மற்றும் மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக அங்கெல்லாம் லட்சக்கணக்கான ரூபாயை செலவிட வேண்டும். ஏழைகளால் இவ்வளவு பணம் செலவு செய்ய இயலாது. அரசு ஆஸ்பத்திரிகளுக்குத்தான் ஏழை, எளியவர்கள் செல்வார்கள். ஆனால் தென்மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த சிறப்பு மையங்கள் கிடையாது.

இவர்களைப்போன்ற நோயாளிகளுக்கு சிறப்பு நிவாரண மையங்களை ஏற்படுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. வலி நிவாரணிகளை கொள்முதல் செய்வது, விற்பனை செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், சிறப்பு சிகிச்சை மையங்கள்தான் இதற்கு தீர்வாக அமையும்.

தமிழகத்தில் குறிப்பாக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி, மதுரை தோப்பூர் அரசு நுரையீரல் சிகிச்சை ஆஸ்பத்திரி, பாலரங்காபுரம் அரசு ஆஸ்பத்திரி, திருச்சி அரசு ஆஸ்பத்திரி, தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரி, நெல்லை மருத்துவ கல்லூரியுடன் இணைந்த அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் புற்றுநோய், எய்ட்ஸ், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்படுபவர்களுக்கு சிறப்பு வலி நிவாரண சிகிச்சை மையங்களை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

பதில் அளிக்க உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில் நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டனர். விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்