போலீஸ்காரரை கம்பியால் தாக்கிய இலங்கை அகதி மீது வழக்கு

திருச்சி, செப்.5-ருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் போலீஸ்காரரை இரும்பு கம்பியால் தாக்கிய இலங்கை அகதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-09-04 19:28 GMT

திருச்சி, செப்.5-ருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் போலீஸ்காரரை இரும்பு கம்பியால் தாக்கிய இலங்கை அகதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்

இலங்கை வடக்கு யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவர் ராசையா. இவரது மகன் ஆனந்த ராசா என்கிற லோகேஷ் (வயது 42). இவர் கடந்த 2019-ம் ஆண்டு மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்கியிருந்தார். அவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைத்தனர்.

இந்த நிலையில் லோகேஷ் அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் துரையிடம் (29) சென்று, `எனக்கு தண்டனை காலம் முடிந்து விட்டது. பிறகு ஏன் என்னை முகாம் சிறையில் வைத்துள்ளீர்கள்' என்று கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இரும்பு கம்பியால் தாக்குதல்

இதனையடுத்து லோகேஷ் அங்கு இருந்த இரும்பு கம்பியால் போலீஸ்காரர் துரையை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இது குறித்து போலீஸ்காரர் துரை, கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் இலங்கை அகதி லோகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்