ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது வழக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-02-22 04:25 GMT

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது விதிமுறைகளை மீறியதாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 20-ம் தேதி உரிய அனுமதி பெறாமல் ஆலமரத்தெருவில் பிரச்சாரம் மேற்கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மற்றும் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்