சிறுவனை வேலைக்கு அமர்த்திய மளிகைக்கடை உரிமையாளர் மீது வழக்கு
சிறுவனை வேலைக்கு அமர்த்திய மளிகைக்கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் கடந்த 28-ந் தேதி திருச்சி சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு செயல்பட்டு வந்த ஒரு மளிகை கடையில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவனை வேலைக்கு அமர்த்தி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை மீட்டதோடு, இது குறித்து அதிகாரி ராஜேந்திரன் கொடுத்த புகாரின்பேரில், குழந்தை தொழிலாளரை வேலைக்கு அமர்த்திய கடை உரிமையாளர் வெங்கடேசன் (வயது 45) மீது காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.