கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 95 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 95 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-25 18:45 GMT


கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. மேலும் நாட்டு வெடி, பேரியம் சால்ட் மற்றும் அதிக சத்தம் எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டதோடு, அரசு அனுமதியின்றி பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தி இருக்கிறது. அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனை செய்பவர்கள் மற்றும் பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உரிமம் இன்றி சாலையோரத்தில் பட்டாசு விற்பனை செய்த 9 பேர் மீதும், விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 95 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்