டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முசிறி:
முசிறி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 41). இவர் தண்டலைப்புத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அந்த கடை முன்பு கிருஷ்ணமூர்த்தியின் மகன் மணிகண்டன், விபிஷணன் மகன் கோபி மற்றும் அவர்களது நண்பர் அருள் ஆகிய 3 பேரும், கடனுக்கு மது கேட்டுள்ளனர். ஆனால் ஜெயக்குமார் தர மறுத்துள்ளார். இதனால் அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதோடு, விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தி, கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இது குறித்து ஜெயக்குமார், முசிறி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.