ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

Update: 2023-02-26 18:45 GMT

கோவை

கோவை பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் ஜன்ஷா (வயது 25), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 24-ந் தேதி இரவு ஆட்டோவில் சாய்பாபா காலனி சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் அந்த ஆட்டோவை உரசுவது போல் சென்றனர். மேலும் விபத்து ஏற்படுத்துவது போல் தாறுமாறாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றனர். இதை ஜன்ஷா கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஜன்ஷா அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த அந்த கும்பல் சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். ரோட்டில் ஆட்டோவை வழிமறித்தனர். பின்னர் ஜன்ஷாவை இரும்பு கம்பியால் தாக்கி அடித்து உதைத்து விட்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்த ஜன்ஷாவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்