தம்பதியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

விக்கிரமங்கலம் அருகே தம்பதியை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-07-28 18:21 GMT

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலம் காஞ்சலி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் விஸ்வலிங்கம் (வயது 71). அதே பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (30). சம்பவத்தன்று விஸ்வலிங்கம் வீட்டிற்கு வரும் மின்சார வயரை பாலமுருகன் துண்டித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாலமுருகனிடம் விஸ்வலிங்கம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த பாலமுருகன் மற்றும் அவரது தாயார் சாந்தி ஆகியோர் விஸ்வலிங்கம் மற்றும் அவரது மனைவி ராஜகுமாரியை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தம்பதி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து தம்பதியை தாக்கிய பாலமுருகன், சாந்தியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்