ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மலைக்கோட்டை:
திருச்சி இ.பி.ரோடு சஞ்சீவி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 42). இவர் சிங்காரத்தோப்பு பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு திருச்சி தேவதானம் ரெயில்வே கேட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இ.பி.ரோடு பகுதியை சேர்ந்த கவுதம்(21), அவரது நண்பர் ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக தன்னை தாக்கி, கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கோட்டை போலீசில் செந்தில்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கவுதம் மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.