குழந்தை இல்லை என கூறி இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர், மாமியார்

கம்பம் அருகே குழந்தை இல்லை என கூறி இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர், மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-22 17:16 GMT

கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மகள் பவித்ரா (வயது 26). இவருக்கும், கூழையனூரை சேர்ந்த ராஜாங்கம் மகன் ராஜேஷ்குமார் (33) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பவித்ராவின் குடும்பத்தினர் 15 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர். அந்த நகைகளை அவருடைய கணவர் ராஜேஷ்குமார், மாமியார் போதுமணி ஆகியோர் அடகு வைத்து செலவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் திருமணமாகி 6 ஆண்டுகளாக குழந்தை இல்லை என்று கூறி பவித்ராவை அவர்கள் கொடுமை செய்து, அவரை வீட்டை விட்டு துரத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பவித்ரா புகார் அளித்தார். அதன்பேரில் அவரது கணவர் ராஜேஷ்குமார், மாமியார் போதுமணி ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்