கணவன் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி மீது வழக்கு
கணவன் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அரிமளம் ஒன்றியம், சேப்பிலான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரை (வயது 50). இவரது மனைவி வணக்கம்மேரி (45). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், வணக்கம்மேரி தேவகோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு துரையை அழைத்துள்ளார். அதற்கு துரை வரமறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வணக்கம்மேரி அடுப்பில் இருந்த வெந்நீரை எடுத்து துரை முகத்தில் ஊற்றியுள்ளார். இதில் காயமடைந்த துரையை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து துரை கொடுத்த புகாரின் பேரில் அரிமளம் போலீசார் வணக்கம்மேரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.