புகையிலை விற்றவர் மீது வழக்கு
தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் மீது வழக்கு
மணல்மேடு:
மணல்மேடு அருகே உள்ள கிழாய் பெரியார் நகரில் வரதராஜ் (வயது 71) என்பவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்த அதை பறிமுதல் செய்த போலீசார் வரதராஜன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.