மாடுபிடித்து விளையாடியவர்கள் மீது வழக்கு

மாடுபிடித்து விளையாடியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-08-28 21:41 GMT

கெங்கவல்லி:

தெடாவூர் பேரூராட்சி சொக்கனூர் ஏரிக்கரை அருகே நேற்று காலை 7 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த பிரபு, சரவணகுமார், ஜெயபால், ஹரி பிரசாத், தமிழ்செல்வன், உள்பட பலர் ஒன்று சேர்ந்து 2 ஜல்லிக்கட்டு மாட்டை வைத்து மாடு பிடித்து விளையாடினார்கள். இது குறித்து தகவல் கிடைத்து விரைந்து வந்த கெங்கவல்லி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் மாடு பிடித்து விளையாடியவர்களை தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அனுமதியின்றி மாடு பிடித்து விளையாடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இனி மேல் ஜல்லிக்கட்டு மாடு பிடித்து விளையாடக்கூடாது என்று எச்சரிக்கை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்