விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் மீது வழக்கு

வடமதுரை அருகே வாகனம் மோதி தொழிலாளி இறந்த சம்பவத்தில் டிராக்டர் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-10-08 20:00 GMT

வடமதுரை அருகே உள்ள புத்தூர் கோட்டைக்கல்பட்டியை சேர்ந்தவர் சிவா என்ற கருப்பசாமி (வயது 23). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி சிவா, மோட்டார் சைக்கிளில் சென்றபோது செங்குறிச்சி-ஆலம்பட்டி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். இது குறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து விசாரணை நடத்தினார். அதில் புளியம்பட்டியை சேர்ந்த குமார் (29) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் சிவாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது தெரியவந்தது. இதையடுத்து குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்