மது விற்றவர் மீது வழக்கு
மது விற்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தா.பழூர்-சுத்தமல்லி பிரிவு சாலையில் அதே பகுதியை சேர்ந்த சின்னப்பன் மகன் சத்யராஜ் என்பவர் மது பாட்டில்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து சத்யராஜை மடக்கி பிடிக்க முயன்றபோது அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் அவர் விட்டுச்சென்ற 32 மது பாட்டில்களை கைப்பற்றிய ரவிச்சந்திரன், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சத்யராஜை தேடி வருகிறார்.