கண்டக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

கண்டக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு;

Update: 2023-05-14 18:45 GMT

நாகர்கோவில்:

நாகா்கோவில் வர்த்தக நாடார் குடியிருப்பை சேர்ந்தவர் பொன்னப்பன் (வயது 51), அரசு பஸ் கண்டக்டர். சம்பவத்தன்று இவர் ஆசாரிபள்ளத்தில் இருந்து பள்ளவிளை செல்லும் பஸ்சில் பணியில் ஈடுபட்டு இருந்தார். அதே பஸ்சில் சரல் பாரதியார் நகரை சேர்ந்த வறுவேல்ராஜ் (50) என்பவர் பயணம் செய்தார். அப்போது பஸ் மெதுவாக சென்றுள்ளது. இதனால் வறுவேல்ராஜ் பஸ்சை வேகமாக ஓட்டும்படி பொன்னப்பனிடம் கூறி தகராறு செய்துள்ளார். மேலும் ஆத்திரம் அடைந்த அவர் திடீரென பொன்னப்பனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி ஆசாரிபள்ளம் போலீசில் பொன்னப்பன் புகார் அளித்தார். அதன்பேரில் வறுவேல்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்