விபத்தை ஏற்படுத்தியவர் மீது வழக்கு

விபத்தை ஏற்படுத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update: 2023-07-06 18:46 GMT

தோகைமலை அருகே சின்னையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 58). இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலை நிமித்தமாக வெளியே சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு செல்ல சின்னையம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.அப்போது எதிரே சுக்காம்பட்டியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து, பழனிசாமி மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதினார். இதில் படுகாயம் அடைந்த பழனிசாமி பெட்டவாய்த்தலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விபத்து குறித்து பழனிசாமி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வேல்முருகன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்