விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு

கம்மாபுரம் அருகே விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு

Update: 2023-04-29 18:45 GMT

கம்மாபுரம்

கம்மாபுரம் அடுத்த கோ.ஆதனுார் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் மகன் செல்வமணி( வயது 38). விவசாயியான இவர் சம்பவத்தன்று அவரது வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தபோது அதேபகுதியை சேர்ந்த ஜோதி மகன் பார்த்திபன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பார்த்திபன், செல்வமணியை ஆபாசமாக திட்டி தாக்கினார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் பார்த்திபன் மீது கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்