வாய்க்காலில் மணல் அள்ளியவர் மீது வழக்கு

வாய்க்காலில் மணல் அள்ளியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-20 20:53 GMT

ஜீயபுரம்:

திருச்சி மருதாண்டகுறிச்சி அருகே உள்ள கூடலூர் கொடிங்கால் வாய்க்கால் பாலம் அருகில் ஜீயபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ரோந்து சென்றார். அப்போது கொடிங்கால் வாய்க்காலில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர் போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர், மருதாண்டகுறிச்சி பகுதியை சேர்ந்த கோபிநாத்(வயது 40) என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்