தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

ஆற்றூரில் தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

Update: 2022-12-04 19:55 GMT

திருவட்டார்,

திருவட்டார் அருகே உள்ள ஆற்றூரை சேர்ந்தவர் தங்கம் (வயது62). இவருக்கு ெசந்தில் (37) என்ற மகனும், கவிதா (32) என்ற மகளும் உள்ளனர். கவிதாவை புல்லாணிவிளையைச் சேர்ந்த மோகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். தற்போது நிறை மாத கர்ப்பிணியான கவிதா நேற்று தனது தாய் வீட்டில் நிற்பதற்காக சென்றார். அப்போது அண்ணன் செந்தில், கவிதாவிடம் 'உன்னை திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். ஏன் இங்கு வந்தாய்' என கேட்டு தகராறு செய்தார். இதை தாயார் தங்கம் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த செந்தில் தனது தாயார் தங்கத்தை தாக்கி கீழே தள்ளினார். இதில் அவரது தலை சுவற்றில் மோதி காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆற்றூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் செந்தில் மீது திருவட்டார் சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்